இது ஓரளவு அறிவியல் கல்வியும் அறிவியல்கொள்கைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமும் கொண்ட குழந்தைகளுக்கான ஒரு புனைகதை. அறிவியலின் வழியாக நிகழ்த்திக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை இது. அந்தக் கதையின் வழியாக மனிதனைப்பற்றிய சில அடிப்படையான தத்துவக் கேள்விகளையும் எழுப்பிக் கொள்கிறது. இளமையிலேயே இப்படி தத்துவக்கேள்விகளை குழந்தைகள் சந்திப்பது அவசியம். அவை வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வரும் தேடலை உருவாக்கும். தத்துவத்திலும் கதையிலும் ஆர்வம்கொண்ட பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகளுக்குரிய எளிய நேரடி நடையில் எழுதப்பட்ட கதை இது. கற்பனையான ஓர் உலகில் திளைத்து வாழ்வதற்கு அழைத்துச்செல்வது.
Be the first to rate this book.