இது சாதாரண நூல் அல்ல. சரித்திரத்தை மாற்ற விரும்புபவர்களின் இலட்சியப் பயணத்திற்கு முதல் படி. நீங்கள் சுமாராகப் படித்தாலும் சரி, சூப்பராகப் படித்தாலும் சரி உங்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாகத் திகழும். தேர்வுக்குத் தயாராகும்போது இருக்கக்கூடிய பதற்றத்தைத் தனித்து பக்குவத்தை அளிக்கிறது. சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறது. சுய சந்தேகத்தை ஆற்றலாக உருமாற்றுகிறது. அயர்விலா உழைப்பை உயர்தரமிக்க செயல்திறனாக்குகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைப் பாடத்திட்டத்தை கூடுதல் கவனத்துடன் ஆழமாகக் கையாள்வதற்கும், சரியாகப் புரிந்துகொள்வதற்கும் இந்நூல் துணை செய்யும். கூடுதலாக தேர்வுக்கு எப்படித் தயாராக வேண்டும்? தேர்வறையில் எப்படி செயல்பட வேண்டும்? தேர்வுத்தாளில் பதிலளிக்கும்போது எப்படி சிந்திக்க வேண்டும்? உயர் மதிப்பெண்களோடுத் தேர்வாவது எப்படி? என்பதைக் கற்றுத் தருகிறது இந்நூல்.
தமிழ்நாட்டிற்கு ஒரு அதிகாரியாக சேவை செய்வது உங்கள் தீவிர இலட்சியம் என்றால் இது ஒரு வாய்ப்பு மட்டுமல்ல; உங்களுக்கான ஓர் ஏவுகணைத் தளம்.
Be the first to rate this book.