பிரசித்தி பெற்ற திகார் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்கள் நால்வர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. உடலால் சிறைபட்டிருந்தபோதும் அவர்களின் சிந்தனை சுதந்திரமானது. அச்சிந்தனைகளின் வெளிப்பாடான இத்தொகுப்பு பெண்ணின் மனம் எனும் ஆவணத்தை வாசிப்பதற்கான ஒரு புதிய முறையாகும்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணுமே தனது மௌனத்தையோ அல்லது சொல்லையோ, இரண்டில் ஒன்றை, தேர்ந்தெடுக்கவேண்டிய ஒரு தருணத்தை எப்போதேனும் எதிர்கொள்கிறார்கள். எங்கே நீதிமன்றங்கள் முழுமையாக நழுவிவிடுகின்றனவோ, அதிகாரம் சற்று யோசிக்கிறதோ, நிறுவனங்கள் வாதிடுகின்றனவோ, மனம் நடுக்கம் கொள்கிறதோ அங்கு கவிதைகளே அறத்தை நிலைநிறுத்தும் ஊக்க சக்தியாகின்றன. மனதில் குமிழியிடும் மந்திரங்களாகின்றன. இதில் உள்ள கவிதைகள் அத்தகையவை.
இவற்றுள் நொறுங்கிப்போன தாலாட்டுப் பாடல்கள் பலவற்றை உங்களால் காண முடியும். திகாருக்குள் இருக்கும் இந்த உலகம் சந்தேகமின்றி எல்லா மேன்மைகளுடனும் வெளியே வரவே விழைகிறது.
இக்கவிதைகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறை எண் 6இல், கவிஞர்களே எடுத்த சில புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் புகழ்பெற்ற அல்லது அவப்பெயர் மிக்க திகார் சிறையைப் பற்றிய நுட்பமான சித்திரத்தை வாசகர்களுக்குத் தருவதே இதன் நோக்கம்.
திகார் சிறையை மாதிரியாகக் கொண்ட இப்புத்தகம் அனைத்தையும் உள்ளடக்கி இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கவிதைகளை வாசிப்பதற்கு முன்பு அவற்றை நீங்கள் சிறையிலிருந்து விடுவிப்பது முக்கியம்.
Be the first to rate this book.