செர்கியஸ் பாதிரியாரைப் பற்றிய இந்தக் கதையை டால்ஸ்டாய் தமது அறுபத்திரண்டாவது வயதில் எழுதினார். ஆகவே முதிர்ந்த அனுபவத்துடனும், சிறந்த கலைப்பண்புடனும் அவர் பாதிரியாரைப் பற்றிச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. அவருடைய மற்றையக் கதைகளைப் போலில்லாமல், இதில் நல்வாழ்வை நாடிச் செல்லும் ஒருவருடைய மனோதத்துவ வளர்ச்சியை டால்ஸ்டாய் விரிவாகக் காட்டியுள்ளார்.
இந்தக் கதையைப் படித்த புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி, 'இரக்கம் கொண்டு உரக்க அழுதுவிட்டேன்' என்று எழுதியிருக்கிறார். மிக உயர்ந்த கதாபாத்திரமாக செர்கியஸ் பாதிரியாரைப் படைத்துவிட்டு, கடைசியில் அவரைச் சேற்றுக்குள் ஆசிரியர் தள்ளிவிட்டாரே என்று அவர் வருந்தி யிருக்கிறார். வியக்கத்தகுந்த முறையில் ஆன்ம வலிமை பெற்ற டால்ஸ்டாயைப் போல் இன்னொரு வரைக் காண்பது அரிது என்று எண்ணும்படி இக்கதை அமைந்திருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.
Be the first to rate this book.