வத்தையா ஒவ்வொரு கடற்கரையிலும் கால் நனைக்கும்போது, தான் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி' எனப் பூரிப்புடன் பதிவு செய்கின்றார். துறையாடல்' தமிழகக் கடறகரையின் பண்பாட்டியல் வரைபடம், காலப் பெட்டகம்: தமிழகக் கடற்கரையைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நம்பகமான அறிவுக் கருவூலம்.
-பேரா.பாத்திமா பாபு
Fisher knowledge systems, a topic that Vareethiah is intimate with and has been researching and writing on for decades, makes repeated appearances with rich ethnographic material from the interviews that he has conducted with fisher elders across the coast of Tamil Nadu.
- Nityanand Jayaraman
முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959, பள்ளம்துறை) தூத்தூர் செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியில் 1982 முதல் மீன்வளமும் விலங்கியலும் கற்பித்து 2018இல் பணிநிறைவு பெற்றவர். 1990களில் தொடங்கி கடல், மீன்வளம், கடல்சார் மக்கள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து தீவிரமாய் இயங்கி வருகிறார். ‘கடலம்மா பேசுறங் கண்ணு’, ‘நெய்தல் சுவடுகள்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’, ‘மூதாய் மரம்’, ‘The Sea Tribes under Seige’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் ஓர் ஆவணப் படத்தையும் படைத்துள்ளார். நெய்தல் வெளி, கடல்வெளி பதிப்பகங்களின் நிறுவன பதிப்பாளராக ஏராளம் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். விகடன் இலக்கிய விருது(2015), அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு (2016), மம்மா ஆதா விருது (2016) முதலிய பல விருதுகள் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.