காலணியால்
என் கால்களை மிதித்து
வலப்பக்க இருக்கையில் அமர முயற்சித்தான்
முதுகுப் பையைக் கழற்றினான்
ஹெட்போன் இணைப்பை செல்போனில் செருகி
பெயர்களைத் தேடி
தன் சிவந்த உதடுகளால் பேசியபடியிருக்கிறான்
எண்ணற்ற விரல்களால்
வேறுவேறு பொத்தான்களில்
செய்திகளை சலனங்களை அனுப்பியபடியிருந்தான்
கனவுகளும் இருக்கக்கூடும்
அதிலிருந்து விரல்களைத் தளர்த்தாமல்
கண்களை மூடிச் சாய்ந்துகொண்டான்
பின்பு
சட்டென விழித்து எழுந்தவன்
முதுகுப் பையை எடுத்துக் கோர்த்துக்கொண்டு
அந்த நிறுத்தத்தில்
சரியாகத்தான் இறங்கிச் செல்கிறானா
எதுவும் பேசாமலேயே
நானோ
என்னிடம் தேம்பி அழுதுகொண்டிருந்தேன்
Be the first to rate this book.