பெண்கள் சமுதாயத்தில் சில கலாச்சார சவால்களால் எவ்வாறு பாதிக்கப்படுகிறாள்? அவள் தன்னை மீட்டெடுத்து எப்படி வாழ்கிறாள்? அவள் toxic ஆன உறவினர்களை தவிர்த்து தனிமையை மேலாக நினைக்கும் அளவிற்கு பாதிக்கபடுகிறாள் தானே? ஆண், பெண், LGBTQIA, யாராக இருந்தாலும் அவரவருக்கு பிடித்த வாழ்வை தேர்ந்தெடுக்க பயப்படுவது யாருக்கு? இந்த சமுதாயத்திருக்கு!!! "தனக்கு "தான்" தான் முக்கியம் என்று அவளின் வாழ்க்கையை வாழத் தொடங்கினாள்".
அன்பினால் கைவிடப்பட்ட அவள் ஏக்கத்தினால் தனக்கு தானே கடிதம் எழுதி ஆறுதல் அடைய நினைக்கும் மனப்பக்குவம்."மார்ச்மாதம் கண்டிப்பாக நாம் எதிர்கொண்ட நிகழ்வுகளே! “இரத்தக்கறை”மாதவிடாய் காலம் இயல்பானது தான், ஆனாலும் அச்சம் இல்லாமல் இருக்கிறோமா? இல்லை, அந்த பயமும் இயல்பாகவே மனதில் தொற்றி கொள்கிறது. பள்ளியில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்பிள்ளைகளுக்கும் பாலியியல் கல்வியின் விழிப்புணர்வை ஆசிரியர் முன்வைக்கிறார்.
Be the first to rate this book.