அறிவியல் வரலாற்றில் சில நூல்கள் வெறும் தகவல் பரிமாற்றக் கருவிகளாக அல்லாமல், சிந்தனை முறையையே மாற்றும் வழிகாட்டிகளாகத் திகழ்கின்றன. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களின் "துளிமக் கணினியியல் [குவாண்டம் கணினியியல்]" என்ற இந்நூல் அத்தகைய அரிய முயற்சிகளில் ஒன்றாகும்.
இந்நூல், கணினி அறிவியலின் அடிப்படைகளை தமிழ் மொழியின் அறிவியல் ஆற்றலோடு இணைத்து, பாரம்பரியக் கணினியிலிருந்து துளிமக் கணினியியல் (Quantum Computing) வரை விரியும் ஒரு ஆழமான அறிவுப் பயணத்தை வாசகர்களுக்கு வழங்குகிறது. இது வெறும் "புதிய தொழில்நுட்பம்" குறித்த அறிமுக நூல் அல்ல; மாறாக, கணக்கீட்டின் (Computation) தத்துவ அடித்தளத்தை மறுபரிசீலனை செய்யும் அறிவியல் உரையாடலாகும்.
-பொறியாளர் ரஞ்சித் குமார் தனராஜ்,
(Data Scientist), ஆப்பிள் நிறுவனம், சிங்கப்பூர்
Be the first to rate this book.