இங்கு வெய்யில் எது? நியான் ஒளி எது? குழம்புகிறோம். இசை எது? துப்பாக்கி முழக்கம் எது? வித்தியாசம் அறிய சிரமமுறுகிறோம். எது மேகம்? எது தொழிற்சாலை கக்கும் புகை? மனிதர்கள் இயற்கையைத் தடுமாற வைக்கிறார்கள்.
'கழிவுகளும் நெகிழிகளும் மிதக்கின்ற பாசிகள் நடுவே ஒரு சிறிய மீன் துள்ளுகிறது' ஒரு மீனுக்காக அக்கறை கொள்கிற ஜென் கோபத்தை பழக்குகிறார் கவிஞர் . மைக் நார்ட்டன் எனும் கவித்துவன், 'ஒரு புதிய உலகத்தின், ஒரு புதிய காட்டின் பிறப்பைத் தாங்கவும், ஒரு ஹீரோவை வளர்க்கவும் செய்கிற மழை' என மழையைச் சிந்திக்கிறான். அவரைவிடவும் இன்னும் அழகாக சிந்திக்கிறார் ஜெயக்குமார்.
- கரிகாலன்
Be the first to rate this book.