இம்மண்ணில் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை எல்லாம் வழக்கொழிந்துவிட்டன என்று அறுதியிட்டு கூறுபவனிடம், இன்றும் அச்சாதியால் வீசும் துர்நாற்றத்தை நுகரச்செய்தால் அவன் என்ன செய்வான்? மனிதக்கழிவுகளை அள்ளுகின்ற கைகளை அவனிடம் காட்டினால் அவன் அதற்கு என்ன பதில் வைத்திருப்பான்? சமூகத்தால் தொடர்ந்து ஒடுக்கப்படும் துப்புரவு ஊழியர்களின் கதைகளை அவன் செவிகள் கேட்கப்பெற்றால் அவன் கொண்டுள்ள நம்பிக்கைகள் என்னவாகும்?
அவன் அந்த நம்பிக்கைகள் யாவற்றையும் சந்தேகிக்க நேர்ந்தால், அவை யாவும் தன் மனத்தில் படிந்த மாசு என உணரப்பெற்றால், அது அவனிடம் என்னென்ன மாற்றங்களையெல்லாம் நிகழ்த்தும்? அன்பும், சுயசிந்தனையும், கற்றலும் அவனிடம் இருக்குமாயின் அவனுள் ஏற்படும் மாற்றங்கள் அவனை அறத்தின் பக்கம் நிற்கச் செய்திடாதோ?
Be the first to rate this book.