தொனிவிளக்கு என்ற இந்நூல் வடமொழியிலுள்ள தவந்யாலோக: என்ற நூலின் மொழிபெயர்ப்பு, த்வந்யா லோகம் அலங்கார நூல்களுள் சிறந்தது. அது ஒன்பதாம் நூற்றாண்டில் காச்மீரத்தில் அவந்திவர்மன்சபையில் இருந்த புலவர்களுள் ஒருவரான ஆநந்தவர்த்தனரால் இயற்றப் பட்டது. அஃது 121% செய்யுட்களையும், ஒவ்வொரு செய்யுளின் கீழ் வசனநடையில்கொண்ட ஆராய்ச்சிப்பகுதியையும் உடையது. செய்யுளைக் காரிகை என்பர். வசனநடையில் உள்ளதை விருத்தி என்பர். காரிகைகளை இயற்றியவர் ஸஹ்ருதயர் (4) என்ற ஒருவர், விருத்தியை இயற்றியவர் ஆநந்தவர்த்தனர் என்ற மற்றொருவர் எனச் சிலர் கருதினர். அஃது அவ்வாறன்று. இருவரும் ஒருவரே, அவர் ஆனந்த வர்த்தனரே என்பது வக்கிரோக்திஜீவிதம், வியக்திவிவேகம், லோசளவுரை, அபிநவபாரதி என்ற நாட்யசாஸ்த்ரவுரை, ஸாஹித்யதர்ப்பணம் முதலிய நூல்களிலிருந்து நன்கு விளங்கும். இதற்குச் சந்திரிகை என்றும் லோசனம் என்றும் இரண்டு உரைகள் உள. தற்போது அச்சிலிருப்பது லோசனம் தான். அது 10, 11ஆவது நூற்றாண்டில் காச்மீரத்தில் வசித்த அபிநவகுப்தரால் இயற்றப்பட்டது. அவர் சைவருக்குள் சிறந்தவர். அவரது உரை மிகவும் சிறந்தது. பட்டலோல்லடர், சங்குகர், பட்டநாயகர், இம்மூவரும் தொளிக்கொள்கையிற் குற்றங்கூற, அவர்தங்கொள்கையை மறுத்துத் தொனிக் கொள்கையை நிலைநாட்டிய பெரியார் இவரே. இந்நூலில் நான்கு உத்யோதங்கள் (கதிர்கள்) உள்ளன. முதல் உத்யோதத்தில் தொனி காவியத்தின் ஆன்மாவாகப் பரம்பரையாய்ப் பெரியோராற் கொள்ளப்பட்ட தென்பதும், அதற்கு இலக்கியம் வால்மீகியின் இராமாயணம்,வியாஸரின் மஹாபாரதம் முதலிய நூல்களென்பதும்; அத்தொனி மகளிரிடம் இலாவணியம் போன்று விளங்குகின்றதென்பதும், அது வஸ்துத்தொனி, அணித்தொனி, சுவைத்தொனி என மூவகைப்படும் என்பதும்; அதனைச் சுவைஞரே அறிதல் கூடு மென்பதும்; அது வாச்சியப்பொருளினின்றும் முற்றிலும் வேறுபட்டது என்பதும்; தொனி இல்லை என்ற கொள்கையும், அது பாக்தமே என்ற கொள்கையும், அதனை உணரலாமேயன்றி இலக்கணமுகத்தாள் கூறமுடியாதென்ற கொள்கையும் பொருத்தமில்கூற்று என்பதும் உணர்த்தப்பட்டன.
Be the first to rate this book.