முனைவர் கி.சிவாவின் இந்நூலில் வேண்டாத சொற்களுக்கோ வெற்றுச்சொற்களுக்கோ இடமில்லை. இதிலுள்ள கட்டுரைகள் சில என்னை வியப்பில் ஆழ்த்தின; அவர்மீதான மதிப்பினை உயர்த்தின. பெருவிளைச்சலுக்கு அடியான சிறந்த விதைநெல்லைப் போன்றவை இந்நூற்கட்டுரைகள். பரந்து விரிந்த தமிழ் உரைநடைக் களத்திற்குக் கலங்கலமாய் விதைநெற் குவியலைக் கொண்டுசேர்த்திருக்கும் இவரை நெஞ்சம் திறந்து பாராட்டுகிறேன்.
தான் பெற்ற பிள்ளைக்குத் தாய் சீர் செய்வதுண்டு. தமிழ்த்தாயின் பிள்ளையான இவரோ, தனையீன்ற தாய்க்குத் தகும்சீர் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். சீரிளமைத் திறம்வாய்ந்த தமிழைப்போல, இச்சீராளனும் சீர்மிகப் பெற்றுப் ‘பொலிக! பொலிக!’ என ‘ஆரப்பொழில் தென்குருகைப்பிரான் ஈரத்தமிழால்’ இதயம் கனிய வாழ்த்தி மகிழ்கின்றேன்.
-பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்
Be the first to rate this book.