Who We Are and How We Got Here, Early Indians ஆகிய இருநூல்களின் கருத்துகளை ஆராய்ந்து தன் கருத்துக்களையும் இணைத்து வழங்கியிருக்கும் முனைவர் க. சுபாஷிணியின் முயற்சி பாராட்டிற்குரியது. உறுதியான, மறுக்க முடியாத அறிவியல் சான்றுகள் பல இருந்தபோதிலும், மத நம்பிக்கைகள் குறுக்கிடும் காரணத்தால் பரிணாம வளர்ச்சியின் கருத்து இன்று வரை சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில்,உயிரியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள் நமது அடையாளத்தையும் தோற்றத்தையும் புரிந்துகொள்ள உதவியுள்ளன. இப்புத்தகம் மனிதத் தோற்றம் பற்றிய அறிவியல் பயணத்தில் ஆர்வமுள்ள எவருக்கும் நாம் யார், நம் தோற்றம், நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது பற்றிய புரிதலைத் தருவதுடன் மனிதகுலம் பற்றிய விரிவான பார்வையையும் வழங்குகிறது. முனைவர் சுபாஷிணியின் இந்த நூல் மனிதர்களிடையே உள்ள வேறுபாடுகளை அறிவியல் அடிப்படையில் அணுக உதவும் என்பதில் ஐயமில்லை.
-முனைவர் தேமொழி. சான்ஃபிரான்சிஸ்கோ.
ஆங்கிலத்தில் வெளிவந்த மரபணுவியல் துறைசார்ந்த இருபுத்தகங்களின் சாரத்தை முனைவர் க.சுபாஷிணி, அழகு தமிழில் தன் அனுபவ அறிவையும், சமுதாய அக்கறையையும் சேர்த்து இப்புத்தகத்தில் கொடுத்திருக்கிறார். "தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வும்" என்ற இப்புத்தகத் தினைப் படித்து முடிக்கும் வாசகர்கள் மனிதகுலம் பற்றிய முற்றிலும் புதிய புரிதலை அடைவது நிச்சயம்.
- முனைவர் அரசு செல்லையா, வாஷிங்டன்.
தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட பெற்றோர்களுக்கு மலேசியாவில் பிறந்தவர் உயர் ஸ்விக்காக ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து ஜெர்மனியில் பணியாற்றி வருகின்றார். இவர் 2001ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட தமிழ் மரபு அறக்கட்டளை பட்டு அமைப்பு என்ற வரலாற்றுப் பாதுகாப்பு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளும் அமைப்பின் தோற்றுநராகவும் அதன் தலைவராகவும் செயல் பட்டு வருகிறார்யம் ஆண்டுகளாக உலகின் பல்வேறு வரலாற்றுப் பகுதிகளுக்கு நேரில் சென்று களப்பணிகள் நிகழ்த்தியவர். இவரது ஆய்வுத்தரவுகள் ஆய்வு நூல்களாகவும் ஆய்வுக் கட்டுரைகளாகவும் வெரிவத்துள்ளன. இவரது நூல் "ஜெர்மன் தமிழியல் நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை"என்ற நூல் 2016ம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த ஆய்வு அலுக்கான பரிசைப் பெற்றது (2020) என்பதோடு ஆசிரியரின் மெட்ச 1726 Publishing Next Industry Award 2012 சிறந்த இந்திய மொழி நூலுக்கான ஆம் பரிசு பெற்றது.
Be the first to rate this book.