தொல்காப்பியர் ஆய்வு இருக்கை வெளியீடு :
தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கான இளம்பூரணர் உரையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் பொருட்டு எழுதப்பட்ட விளக்கக் குறிப்புகள் அடங்கிய பதிப்பாக அமைகிறது இந்நூல். திருவாவடுதுறை ஆதினத்தில் கையெழுத்துப் பிரதியாக இருந்த இதனைக் கண்டுபிடித்து விரிவான ஆய்வு முன்னுரையுடன் பதிப்பித்தவர் பொ. வேல்சாமி.
இளம்பூரணர் உரையில் நுட்பங்களைப் பல்வேறு இடங்களில் விளக்கிச்செல்வதுடன் நச்சினார்க்கினியர் உரையுடன் ஒப்பு நோக்கியும் தொல்காப்பியத்தைப் புரிந்து கொள்ள பலவகையிலும் முயல்கின்றன இந்நூலில் உள்ள விளக்கக் குறிப்புகள், தொல்காப்பியத்திற்கான உரைவளப் பதிப்பு உருவாக்கத்திற்கான ஆதார நூலாகவும் இந்நூல் விளங்குகின்றது.
Be the first to rate this book.