தன் ராமலிங்கத்தின் மஇக்கதைகளை வாசிக்கையில் கொங்கு வட்டார இலக்கியத்தில் மேலுமொரு படைப்பாளியின் வருகையை உணர முடிகிறது. வட்டார இலக்கியம் என்கிற சொல்லே ஏதோ அந்தந்த வட்டாரங்களுக்கான இலக்கியம் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு நிலத்தின் தன்மை, அதன் மக்களின் மொழி மற்றும் அவர்தம் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்வதன் காரணமாகவே அது வட்டார இலக்கியமாகச் சுட்டப்படுகிறது. அப்படியாக இவர் கொங்கு வட்டாரத்தின் இயல்பையும், மனிதர்களையும் உயிரோட்டமாகத் தனது கதைகளில் புனைகிறார். அறிமுகப் படைப்பாளிகள் பெரும்பாலும் தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்களிலிருந்தே கதை புனைவர். இவரது கதைகளும் அவ்வகையே.
Be the first to rate this book.