ஏகாதிபத்தியத்தின் தலைவாயில் அமெரிக்கா. அந்தக் கழுகு தேசத்தின் புறவாசலில் பறந்தது செங்கொடி. அந்தச் செங்கொடித் தீவின் அதிபராக அமர்ந்தார் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி ஃபிடல் காஸ்ட்ரோ.
விளைவு: அமெரிக்காவின் இயற்கை எதிரியாகியது கியூபா. ஒன்றல்ல. இரண்டல்ல நூற்றுக்கணக்கான முறை கொலை செய்ய முயன்றும் உயிர் தப்பினார் ஃபிடல். பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஏகாதிபத்தியத்தின் எதிரியை உள்கூடத்தில் முடக்க நினைத்த அமெரிக்க அபிலாஷைகளை சிதறடித்தது ஒரு கறுப்பின வேங்கை.
ஃபிடலை மன்ஹாட்டன் தீவுக்குள் அடைக்க நினைத்த அமெரிக்க கழுகின் கண்களில் மண்ணைத் தூவி, 'கறுப்பர்களின் மக்காவான ஹார்லெம் சேரிக்கு அழைத்து வந்தார் கறுப்பின புரட்சியாளர் மால்கம் X.
ஃபிடல் காஸ்ட்ரோவும் மால்கம் X-ம் விதைத்த விதை. இன்று ஹார்லெம் தெருக்களில் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒலிக்கும் முழக்கங்களாக... பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களாக... வரலாற்றில் இடம்பெற்ற 1960 செப்டம்பர் 19 அன்று. 'அந்தப் பொழுதில்' என்ன நடந்தது?
Be the first to rate this book.