ஈரோட்டுக் கண்ணாடி வழியே சமூகத்தை, மக்களை பார்த்த கண்ணோட்டம்தான். இன்று எளிய மனிதர்களுக்கு ஆய்வும், உரையாடலும், கல்வியும் சாத்தியமானது. அதுபோல. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வேர்களை வழக்காறுகளில், உரையாடலில் இருந்து ஆவணப்படுத்திய பெரியாரியவாதியான தொ.ப.வின் பார்வையில் பெரியாரையும், (எந்தக்) கடவுள் மறுப்பையும், நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்குமான நுட்பமான அரசியலையும் அணுகுவது காலத்தின் தேவையாக உள்ளது. எளிய, உழைக்கும் மக்களுக்கான கருத்தாயுதமாகவும். பாதுகாப்பு அரணாகவும் தந்தை பெரியாரும். தொ.ப.வும், அவர்களது படைப்புகள் வழியே களத்தில் உள்ளனர். சமகாலத்திலும் 'எதிரி' எப்போதும் போல் 'பார்வையாளனாக' சமூகத்தில் காலந்தோறும் நடைபெற்று வரும் சாதிய மோதல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். 'எதிரியை அடையாளம் காண்பதும்' 'சாதி கடந்து ஒன்றிணைவதும்' தமிழ்ச் சமூகத்தின் அவசரத் தேவையாக உள்ளது. நாம் ஒன்றிணைவது 'எதிரி'க்கு அச்சமூட்டும் என்பதே யதார்த்தமாக உள்ளது. தவறும்பட்சத்தில் 'இந்துத்துவப் பாசிசம்' தமிழ்ச் சமூகத்தை சாதியால், மதத்தால் பிளவுப்படுத்தும். குசராத், மணிப்பூர், அரியானா வரிசையில் தமிழகமும் இடம்பெறுவது தவிர்க்க இயலாதுபோகும்.
Be the first to rate this book.