தனி நாயக அடிகளார் இயற்றிய விரிவுரைகளின் தொகுப்பாகிய இந்நூலில், திருக்குறள் தரும் நீதிக்கருத்துக்கள் கிரேக்க நாட்டு நீதிக் கருத்துக்களுடன் ஒப்புநோக்கி விளக்கப்பெற்றுள்ளன. உரோமையர் நீதி நூல்களுடன் ஒப்புநோக்கும் முறையில் திருக்குறட் கருத்துக்களின் உயர்வு நன்கு விளக்கப் பெற்றுள்ளது.
புத்தருடைய அறவுரைகளும் அவற்றை விளக்கிய ஏனைய அற நூல்களின் கருத்துக்களும் திருவள்ளுவர் வாய்மொழிகளுடன் ஒப்புநோக்கி ஆராயப்பெற்றன. புத்த நூல்கள் துறவறத்தின் மேளமையையும் திருக்குறன் இல்லறத்தின் சிறப்பினையும் அறிவுறுத்தும் முறையில் அமைந்துள்ள இனிது புலப்படுத்தப்பெற்றுள்ளது.
பற்றிக் தெய்வப் புலவர் அருளிய திருக்குறளைப் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை வெளிநாட்டறிஞர்கள் ஆராய்ந்து கூறிய முடிபுகளைத் தனி நாயக அடிகளார் தம் விரிவுரைகளில் அழகுற எடுத்துக்காட்டியிருப்பது. திருக்குறளைப்பற்றிய அறிவிலும் பெருமையிலும் நம் நாட்டவரினும் மேலை நாட்டறிஞர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ள திறத்தினை நன்கு விளக்குவதாகும்.
உலகில் உள்ள ஒழுக்க நூல்கள் எல்லாவற்றுக்கும் மேம்பட்டுத் நிகழ்வது உலகப் பொது மறையாகிய திருக்குறளே என்னும் மெய்ம்மையினை இவ்விரிவுகைகள் சிறப்பாக விளக்குகின்றன
Be the first to rate this book.