அன்றைய அரபுகளிடம் மலிந்திருந்த அறியாமை நிறைந்த கோட்பாடுகளையும், மூடப்பழக்கங்களையும் கூர்மையாக இந்த அத்தியாயத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
அசத்தியங்களில் இருந்து மக்களை விடுவித்து அவர்களை நேர்வழியின் பக்கம் செலுத்துவதற்காகவே இறைத்தூதர் அனுப்பப்பட்டுள்ளார். இறைவனுக்கு ஒருபோதும் பிள்ளைகள் இருக்க முடியாது; இறைவன் யாரையும் மகனாக, மகளாக எடுத்துக்கொள்ளும் தேவையும் அற்றவன் என்கிற விஷயத்தையும் ஆணித்தரமாக விளக்கப்பட்டுள்ளது. இறைவனிடம் தமக்காகப் பரிந்துரைப்பவர்கள் என்று யாரையெல்லாம் கருதிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களும் இறைவனுடைய அனுமதி இல்லாமல் எவருக்கும் பரிந்துரை செய்ய இயலாது என்பதையும் இந்த அத்தியாயத்தில் இறைவன் உறுதியாகக் கூறுகின்றான்.
இறைவனின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆனை சரியாகவும் ஆழ்ந்தும் புரிந்துகொள்ள விழையும் ஒவ்வொருவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய விளக்கவுரை நூல் இது.
Be the first to rate this book.