1920ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள், குன்றத்தை மையம்கொண்டுள்ள அரசியல், கள நிகழ்வுகள் திருப்பரங்குன்றம் மலை, கோயில், சிக்கந்தர் தர்காவின் முழு வரலாறு, தொல்லியல் ஆதாரங்கள்குறித்த ஆய்வு நூல்.
வள 1998ஆம் ஆண்டு முதல், மாணவர், மனித உரிமை, அரசியல் தளங்களில் இயங்கி வருபவர். மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் வழியிலான செயல்பாட்டாளர். 2004ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்து மதுரை மாவட்ட உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கிரானைட், தாது, ஆற்று மணல் கொள்ளை உள்ளிட்ட கனிம சுரண்டலுக்கு எதிராகவும், பரமக்குடி, கூடங்குளம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட அரச வன்முறைக்கு எதிராகவும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடும் வழிபாட்டு உரிமைக்காகவும், சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்படும், குடியுரிமை திருத்தச் சட்டம், பாபர் மசூதி. காஷ்மீர், காவல்துறை அடக்குமுறை உள்ளிட்ட தாக்குதல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து களத்தில் நிற்பவர். சமச்சீர் கல்வி, உயர்கல்வியில் ஊழல் எதிர்ப்பு, அனைத்து சாதி அர்ச்சகர், ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களில் மக்களோடு இணைந்து போராடி, பலமுறை சிறை சென்றவர். நீதித்துறையின் அரசியல் சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்திப் போராடியதால், வழக்கறிஞர் தொழிலுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு, மீண்டு வந்தவர். நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, மக்களாட்சிக்கான முதல் தேர்தல், அய்க்கிய நாடுகள் சபை மேற்பார்வையில் நடைபெற்றபோது, நேபாள தேர்தல் ஆணைய அழைப்பின் பேரில், தேர்தல் பார்வையாளராகச் சென்றவர். இவரது சுற்றுச்சூழல் பணிகளைப் பாராட்டி ஆனந்தவிகடன் இதழ் ‘டாப் டென் மனிதர்கள்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. சங்பரிவார் அமைப்புகள் தேசிய அளவில் ஒருங்கிணைந்து, தமிழ்நாட்டில் மத வன்முறையைத் தூண்ட கையில் எடுத்திருக்கும் திருப்பரங்குன்றம் பிரச்சினையை, பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் களத்திலும், நீதிமன்றத்திலும் எதிர்கொண்டு வருபவர். மதுரை நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப் பாளராகச் செயலாற்றிவரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் தந்தை புலவர் இ.சேதுராமன், தாய் செல்வக்கணவதி, துணைவி மென்பொறியாளர் நந்தினி, மகன் யாழினியனோடு மதுரையில் வசித்துவருகிறார்.
Be the first to rate this book.