ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான திருநங்கைக் குறித்த சிறுகதை. சிறுகதைகள் சொல்லும் விதத்திலும் கதைக்கு கதை வித்தியாசத்தையும் காண முடிகின்றன. ஆணாக பிறந்தவர்கள் ஏன் திருநங்கையாக மாறுகிறார்கள், எவ்வாறு மாறுகிறார்கள், திருநங்கையாக மாற்றம் பெறும்போது குடும்பத்தினர் மனநிலை என்ன, சமூகம் திருநங்கையர்களை எவ்வாறு நடத்துகிறது என கதைகள் வழி ஆசிரியர்கள் உணர்த்துகின்றனர். திருநங்கையர்களின் மனத்தை புரிந்து கொள்பவர்கள் அரிதாகவே உள்ளனர். திருநங்கையர்களை அரிதாகவே உ ஒரு போகப்பொருளாகவே ஆண் சமூகம் அனுபவித்து வந்ததையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ளனர்.
திருநங்கையர் குறித்து நேர்மறையான பதிவுகளும் உண்டு. ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் கண்ட மனிதர்களையும் கண்முன் நிறுத்தத் தவறவில்லை. ஆக மொத்தத்தில் திருநங்கையர்களின் வலிகளைத் தெரிவித்ததுடன் விடுதலையும் கோருகிறது. சமத்துவமும் வேண்டுகிறது. ஆண், பெண் போல அங்கீகாரம் தேவை என்கிறது. திருநங்கையர் குறித்த இச்சிறுகதைகள் அவசியம் வாசிக்கப்பட வேண்டியவையாகும்.
Be the first to rate this book.