பாரில் சிறந்த மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைப் பக்தியின் மொழி எனப் போற்றினர். அதற்குக் காரணம் தமிழ்மொழியில் பெருக்கெடுத்துள்ள திருமுறைகள் மற்றும் திவ்யப்பிரபந்தம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களே. ஊனையும் உயிரையும் உருக்கி உள்ளத்தில் அன்பும் அமைதியும் ஊற்றெடுக்கச் செய்யும் பக்தி இலக்கியங்கள் உலகிற்கே புதுமையானவை. அவற்றுள் திருமுறைகள் எனப் போற்றப்படும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்பதாவது திருமுறையாக ஒளிர்வது திருமாளிகைத் தேவர் உள்ளிட்ட ஒன்பதின்மர் அருளிச்செய்த திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு ஆகும். திருமாளிகைத் தேவர் முதல் சேதிராயர் ஈறாக ஒன்பதின்மர் பாடிய 301 பாடல்கள் அடங்கியுள்ளன. சிவனுக்கு சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு இத்திருமுறையில் உள்ளது.
சைவத்தின் பெருமை போற்றும் இத்திருமுறையைப் பரவலாக அனைவரும் பெற்றுப் படிக்குமாறும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் முகிழ்த்ததுவே இந்த உரைநூல், எளிய தெளிவுடையுடன், கடின சொற்களுக்குப் பொருளும், முக்கியமான தொடர்களுக்கு விளக்கமும் அமைந்த விளக்கவுரையும் கொண்டுள்ளது.
Be the first to rate this book.