வெங்கண்ணாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. இனி, அளகிரி, தன் இஷ்டப்படி ஆடமாட்டான். பொன் கொடுப்பான் பட்டாடை நிறையக் கொடுப்பான், விருந்தளிப்பான், உபசரிப்பான், ஆனால் ஆட்சி முறையை மாற்ற இசையான் - ஆரியதாசனாக மாட்டான் என்பது விளங்கிவிட்டது. கோபம் கொப்பளித்தது. இதற்கா, நான் இவனுக்குப் புதையலை எடுத்துத் தந்தேன். என் வார்த்தையை வேதமாகக் கொள்வான். என் சுட்டுவிரல் காட்டும் வழி செல்வான் என்றல்லவா, எண்ணிக் கொண்டிருந்தேன். எதிர்த்துப் பேசுகிறான் - துச்சமாகக் கருதுகிறான் - இனி இவனால் ஆபத்தே கூட ஏற்படக்கூடும்.
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.