'திருக்குறள் வாழ்க்கையின் விளக்கம். வாழ்க்கைக்கு வேண்டிய திருக்குறள் விளக்கங்களை எடுத்துரைக்கிறது இந்நூல்' என்கிறார் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி.
தம்மபதத்தையும் தாவோயிஸத்தையும் ஓஷோவையும் கிருஷ்ணமூர்த்தியையும் வாய்பிளந்து கேட்கும் நவீன காலத் தமிழர்கள் சிலர் குறள் வெறும் அறநூல் என்று அரற்றுவார்கள். இவர்களுக்கு வள்ளுவர் 'மக்களே போல்வர்..', 'நாறா மலரனையர்..' என்று எழுதி விடை கூறாமல் விட்டிருந்தால் வள்ளுவரை நவீன கவிஞனாக்கி கொண்டாடியிருப்பார்கள்.
குறள் அறநூல்தான். வாழ்க்கையைப் பேசுகிறபோது அது இலக்கியம்தான். அந்த அழகை, அந்த நுட்பத்தை, அந்த வாழ்வியலை குறளின் குரலில் பேசியிருக்கிறார் பேராசிரியர் இ.சு.
விரல்விட்டு எண்ணக்கூடிய இலக்கிய இலக்கணப் பேரறிவாளர்களில் தனிச்சிறப்பான பெருமைக்குரியவர் இ.சு. என்கிறார் கவிஞர் சிற்பி. புலமையின் நவீன வடிவம் இ.சு.
-சந்தியா நடராஜன்.
Be the first to rate this book.