திருக்குறள் விருத்தியுரை என ஒரு சில உரைகளே தமிழ் இலக்கியத்தில் போற்றப் பெறுகின்றது.
அரசஞ்சண்முகனார் எழுதிய முதற்குறள் விருத்தி (1921), வ.உ.சிதம்பரம்பிள்ளையின் திருக்குறள் அறப்பால் விருத்தியுரையுடன் (1935), திருக்குறள் விவேக விருத்தியுரை (பார்த்தன் எழுதியது 1954), இவற்றுள் தண்டபாணியார் உரை 1933 ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது, 39வயதிலேயே மறைந்துவிட்டார் தண்டபாணியார்.
வினாவும் விடையுமாகத் தண்டபாணியார் தம் உரையில் விளக்கம் தருவது படிப்போருக்குச் சுவை மிகு நல்கும். குறளின் கருத்துகளை விளக்குவதற்குப் பல அரிய நூற் பகுதிகளையும் மேற்கோளாகக் காட்டுவது இவர்தம் மரபாகும்.
தண்டபாணியார் பழம்பெரும் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் கற்றுத் தெளிந்த அறிஞர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், அற இலக்கியம் முதலான பல்வேறு நூல்களையும் தம்முரையுள் காட்டி விளக்கம் தருவார்.
- பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி
Be the first to rate this book.