நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும், போட்டியாளர்களை விஞ்சுவதற்கும், ஒளியின் வேகத்தில் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலையை அடைவதற்கும் உங்களுடைய கற்றலைத் துரிதப்படுத்துவதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறைகள் இந்நூலில் உள்ளடங்கியுள்ளன. ஒரு புதிய திறமையைக் கைவசப்படுத்துவதற்கான உறுதியான வழியை இந்நூல் திரைவிலக்கிக் காட்டுகிறது. நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களோ இல்லையோ, ஒவ்வொரு நாளும் நாம் சில திறமைகளை மீண்டும் மீண்டும் நம்முடைய வேலைகளில் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு பொழுதுபோக்கு நடவடிக்கையும் ஆர்வமும்கூட ஒரு திறமைதான். தகவல்களைப் பெற்று அவற்றை உங்களுடைய அனுகூலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதில் என்னென்னவெல்லாம் அடங்கியுள்ளன என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஒரு வெற்றிகரமான நூலாசிரியரான பீட்டர் ஹாலின்ஸ், உளவியலில் நிபுணத்துவம் பெற்றவர். மனிதச் செயல்திறன் குறித்துப் பத்து ஆண்டுகளுக்கு மேல் அவர் ஆய்வு செய்துள்ளார். அவர் பலதரப்பட்ட மக்களுடன் இணைந்து செயல்பட்டு, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்தியுள்ளார். அவர் தன்னுடைய கல்விசார் அனுபவங்களிலிருந்தும், பயிற்றுவிப்பு மற்றும் ஆராய்ச்சி அனுபவங்களிலிருந்தும் பல்வேறு விஷயங்களை எடுத்தாண்டு இந்நூலைச் செழுமைப்படுத்தியுள்ளார். ஒரு புதிய திறமையை அதிவிரைவாகக் கைவசப்படுத்த விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய ஒரு சுவாரசியமான நூல் இது.
Be the first to rate this book.