இந்த அரிய நூல் வாயிலாக, வார்த்தைச் சித்தர் வலம்புரியார் 'திருக்குறளைத் திறப்போம் வாருங்கள்!" என்கிறார். ஆனால், வாசகன் இந்த நூலைத் திறந்தபின் மூடவே விரும்பாத அளவுக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறார். திருக்குறள் மேலெழுந்தவாரியாகவோ, மேம்போக்காகவோ வாசித்துவிட்டு மூடி வைக்கவேண்டிய நூல் கிடையாது என்பதை ஒவ்வொரு தமிழனுக்கும் உணர்த்தியிருக்கிறார் வலம்புரியார். வள்ளுவனும் வலம்புரியும் நம் இல்லத்திற்கு வந்திருந்து சிறிது நேரம் செந்தமிழ் விருந்து நல்கிப் போனது போல இருக்கிறது, இந்த நூலை வாசித்து முடித்தபோது.
-தொ.சூசைமிக்கேல்
Be the first to rate this book.