கலைஞரின் படங்களில் கதையோடு சேர்ந்து சமத்துவமும், சகோதரத்துவமும் சமதர்மமும் இருந்தது என்கிறார் குமரன் தாஸ். அதனால்தான் கலைஞரின் படங்கள் அதிகமாக பயமுறுத்தியது. இவை மூன்றும் ஆதிக்கத்துக்கு எதிரானவை. ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட தனது எழுத்தைக் கருவியாகப் பயன்படுத்தினார் கலைஞர். சமூகநீதி, சுயமரியாதை. ஜாதி ஒழிப்பு ஆகிய அனைத்தும் திரை வசனங்களாக கலைஞரின் படத்துக்குள் எப்படி புதைந்து கிடந்தது என்பதைத் தோண்டி எடுத்து வந்து தருகிறார் குமரன் தாஸ். அவரது எழுத்துக்கு ஒரு தனித்தன்மை இருக்கிறது. பல இடங்களில் வாசிக்கும்போது, படத்தைப் பார்ப்பது போல இருக்கிறது. அவருக்குள் ஒரு கதை சொல்லி இருக்கிறார். அவர் கொள்கை சொல்லியாகவும் இருப்பதால் சொல்லும் திறன் வாசிப்பாளனை ஈர்ப்பதாக இருக்கிறது.
- ப. திருமாவேலன்
Be the first to rate this book.