வி.சி என்று நண்பர்களால்அழைக்கப்படும் வி. சந்திரசேகரன் மயிலாடுதுறைக்காரர். பெங்களுரில் பெரிய நிறுவனமொன்றில் பணியாற்றிய அவரை ‘தமிழ் ஈர்ப்பு' சென்னைக்கு இழுக்க, விகடன், குமுதம் இதழ்களில் பலகாலம் பணியாற்றியவர். சிறுகதைகள், பேட்டிகள், கட்டுரைகள் என்று அவர் எழுத்து பலபக்கம் சென்றிருந்தாலும் இசையே அவரது ஆன்மா. குமுதத்தில் ‘மாயவரத்தான்’ என்றபுனைப் பெயரில் இசைவிமரிசனங்களை நீண்டகாலம் எழுதியவர். ஏற்கனவே இசை தொடர்பான இரண்டுபுத்தகங்களை வெளியிட்டுள்ளார். தற்போது ஒளி ஊடகத்திற்கு வந்துள்ளஅவர் கொஞ்ச காலம் தந்தி டி.வியில் பணியாற்றியபோதுபாலமுரளி கிருஷ்ணா, ஏ.ஆர். ரஹ்மான்உள்பட பல பிரபலங்களை நேர்காணல்செய்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக ‘வாவ் தமிழா' சேனலில்சங்கீத விற்பன்னர்களை பேட்டி காண்கிறார். ஆக இசையுடன் அவரதுநெடிய பயணம் தொடர்கிறது.
Be the first to rate this book.