திரைப்படங்களில் கதை, கதாபாத்திரங்கள், காட்சிகள் எனப் பல விஷயங்கள் இருந்தாலும், அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக ஒரு மையக்கருத்து, கருப்பொருள் (theme) இருக்கும். கருப்பொருளைச் சுற்றித்தான் கதை பின்னப்பட்டிருக்கும். காட்சிகளும் அதையொட்டித்தான் அமைக்கப்படும். இந்த மையக்கருத்துதான் ஒரு படம் எதைப் பற்றிப் பேசுகிறது? என்ன செய்தியைச் சொல்ல வருகிறது? என்பதைத் தீர்மானிக்கிறது.
ஒரு நல்ல திரைப்படம், அதன் மையக்கருத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல், காட்சிகள், கதாபாத்திரங்களின் செயல்கள், வசனங்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு போன்ற பல்வேறு கலைக் கூறுகள் மூலம் ஆழமாக வெளிப்படுத்தும். இதனால், பார்வையாளர்கள் படத்தைப் பார்க்கும்போது, அந்தக் கருப்பொருளை உணர்வுபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் உள்வாங்கிக் கொள்வார்கள். இதுதான், ஒரு திரைப்படத்தின் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. பல திரைப்பட இயக்குனர்கள் சாதிக்க விரும்புவதும் இதுதான்.
ஆகவே, ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது, அதன் மையக்கருத்து என்ன? அது எப்படி வெளிப்படுத்தப்பட்டுள்ளது? என்பதைப் புரிந்துகொள்வது, படத்தைப் பற்றிய நமது புரிதலை மேலும் ஆழப்படுத்தும். திரைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்தவொரு திரைப்படத்தைப் பார்த்தாலும், அப்படத்தின் மையக்கருத்து என்ன? என்பது சார்ந்து சிந்திக்க வேண்டும். வெறுமனே படத்தைப் பார்த்துவிட்டு, அத்தோடு கடந்துவிடக்கூடாது!
திரைப்படங்களில் எத்தனை வகையான கருப்பொருள்கள் திரைப்படங்களில் எப்படிப் உள்ளன. அவை பயன்படுத்தப்படுகின்றன? என்பதைத் தகுந்த உதாரணங்களோடு இக்குறுநூல் விளக்குகிறது.
Be the first to rate this book.