திரைப்படம் எடுப்பது மட்டும் ஒரு கலையல்ல, அதைப் பார்ப்பதும் ஒரு கலைதான். திரைப்படம் சார்ந்து படிக்கும் மாணவர்களின் கவனிக்கும் திறனை மேம்படுத்தவும், அவர்கள் ஒரு திரைப்படத்தை ஆழமாகப் பார்க்கும் திறன்களையும் பழக்கங்களையும் வளர்த்துக்கொள்ளவும், திரைப்படக் கலையின் சிக்கலான அம்சங்களைக் கண்டறியவும் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த நூல் எந்த ஒரு திரைப்படப் பகுப்பாய்விற்கும், ஒரு திரைப்படத்தை அதன் தொழில்நுட்பங்கள் புரிந்து ரசனையோடு அணுகுவதற்கும் துணையாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகங்களை நீங்கள் ஓரிரு நாட்களுக்குள் படித்துவிட முடியும். அவ்வளவு சிறிய புத்தகங்கள்தான் இவை. ஆனால், அந்த ஒவ்வொரு புத்தகத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிற பயிற்சிகளையும் நீங்கள் செய்து முடிக்கிறபோதுதான், நீங்கள் இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்ததாக அர்த்தம். அப்போதுதான், நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையின் திறனும் மாறும். எனவே, மெத்தனமாகப் பயிற்சிகளைக் கடந்துசெல்லாமல், முறையாகத் தகுந்த நேரம் ஒதுக்கி அந்தப் பயிற்சிகளைச் செய்து முடியுங்கள். மேலும் ஒரு திரைப்படத்தை, அதன் தொழில்நுட்பங்களிலும் பகுப்பாய்வுக்கு உட்படுத்துங்கள். திரைப்பட ரசனை என்னும் கலையை உணர்ந்து திரைப்படங்களைப் பாருங்கள்.
Be the first to rate this book.