வரலாறு நெடுகிலும் சமூகக் கேள்விகளைத் தங்கள் படைப்புகளில் முன்வைத்த இயக்குநர்கள் பெரும் அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். இத்தாலிய இயக்குநரான பசோலினி, டச்சு இயக்குநரான தீ வான் காக் உள்ளிட்ட சில இயக்குநர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பேட்ரிக்கோ குஸ்மானின், 'பேட்டில் ஆஃப் சீலே' ஆவணப்படத்தைப் படம்பிடிக்கும்போதே அதன் ஒளிப்பதிவாளரான ஜோர்ஜ் முல்லர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். சமகால உதாரணம் ஈரானிய இயக்குநர் ஜாபர் ஃபனாஹி. இந்தப் பட்டியல் மிக நீளமானது. இவர்கள் எல்லோருமே திரைக் கலையைத் தீவிரமான கருத்தியல் வெளிப்பாட்டுச் சாதனமாகவே பயன்படுத்தினார்கள். உயிர் தழைத்திருப்பதே பெரும் சவாலாக இருக்கும் நிலையிலும் கூட ஜனநாயகரீதியிலான ஒரு விவாதத்தை ஆளும் வர்க்கத்துடன் முன்னெடுக்கத் தமது படைப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவ்வகையில், தமது படைப்புகளின் வழியே தீவிர விவாதங்களை முன்னெடுத்த 11 சர்வதேச இயக்குநர்களின் உரையாடல்களும் கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
Be the first to rate this book.