டேனியல் அரிஜோன் எழுதிய 'Grammar of Film Language' என்ற நூல் சுமார் 1000 பக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான படைப்பு. இந்த நூலின் தமிழாக்கம் அனைவருக்கும் எளிதாக சென்றுசேரும் வகையில், பத்து பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்பட உள்ளது. இந்நூல், அதன் முதல் பகுதியே!
சினிமா இயக்கம் (Film Direction)', குறித்து ஏற்கனவே பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இந்நிலையில் இன்னொரு புத்தகம் ஏன் தேவை? அதுவும் ஏன் இந்தப் புத்தகம்? என உங்களுக்குக் கேட்கத் தோன்றும்.
அவை திரையில் எப்படி காட்சிகளைத் திட்டமிட்டு அமைப்பது என்ற பகுதி. எப்படி நடிகர்களை Staging செய்வது? எப்படி காட்சி மொழி ரீதியாகத் திரையில் கதை சொல்வது? திரைமொழி (Film Langugage) என்றால் என்ன? என்பவற்றைக் குறித்து தற்போது புத்தகங்கள் எழுதப்படுவதில்லை அல்லது முழுமையற்றவையாக உள்ளன. மேலும் அவற்றில் மிகக் குறைவானவைதான் வளர்ந்து வரும் இளம் சினிமா இயக்குனர்களுக்கு, அவர்களின் சொந்தப் பணிகளில், தாங்கள் எடுக்கிற படங்களில், பயன்படுத்தக்கூடிய நடைமுறைத் தகவல்களை (practical information) வழங்குகின்றன.
இக்குறைகளைப் போக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாகும்.
இந்தப் புத்தகத்தில் சினிமா கோட்பாடுகள் பற்றி விளக்கவில்லை. மாறாக, உலகம் முழுவதும் பல்வேறு இயக்குனர்களால் பரிசோதிக்கப்பட்டு, வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட, சினிமா உருவாக்கம் சார்ந்த உண்மையான தகவல்கள், இலக்கணங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூறுகள் படங்களுடன் இதில் இடம்பெற்றுள்ளன. இதை நீங்கள் எடுக்கவிருக்கும் எந்தத் திரைப்படத்திலும் நேரடியாகப் பயன்படுத்தலாம்.
இந்த நூலின் நோக்கம், சினிமாவைக் கற்றுக்கொள்வதற்காக, நாம் எடுத்துக்கொள்கிற நீண்ட காலப் பயிற்சியின் கால அளவைக் குறைப்பதாகும். கால கட்டத்திற்குள் நம்மால் சினிமாவின் திரைமொழியைக் குறுகிய கற்றுக்கொள்ள முடியும். மேலும் இப்புத்தகம், ஏராளமான இடங்களில் இருந்து சிறு சிறு தகவல்களைத் தேடித் திரட்ட வேண்டிய அவசியம் இல்லாமல், கதை சொல்லும் அடிப்படை விதிகளை ஒரே இடத்தில் தொகுத்துக் கொடுக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.
சினிமாவை முறையாகக் கற்றுக்கொள்ள விரும்புகிற ஒவ்வொருவருக்கும் இந்நூல் பயன்படும்.
Be the first to rate this book.