"வறுமை, செல்வம் இரண்டுமே சிந்தனையின் குழந்தைகள்."
வெளியான 1937ஆம் ஆண்டு முதலே. திங்க் அண்ட் க்ரோ ரிச்' என்ற இந்நூல் உலகின் சிறந்த சுய உதவி நூலாகக் கருதப்படுகிறது. செல்வத்தையும் செழிப்பையும் தேடும் மக்களுக்கான வேதநூலான இது, உலகின் பலதரப்பட்ட மாபெரும் செல்வந்தர்களும், வெற்றியாளர்களுமான மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்டது. இதுவரை யாரும் அடைந்திராத நிரந்தரமான வெற்றியை வாழ்வில் அடைவது எப்படி, அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும். எப்படிச் செய்யவேண்டும் என்பதை நெப்போலியன் ஹில் உங்களுக்கு இந்நூலின் வழியாகக் கற்பிக்கிறார்.
இந்தப் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில், பதிப்பாசிரியர்கள் பில் மற்றும் ஆன் ஹார்ட்லி ஆகியோர். முன் பதிப்பில் இடம்பெற்ற பல பகுதிகளுக்கு விளக்கவுரை தந்திருப்பதோடு, மேலும் உதாரணங்களையும் உண்மைக் பிரபலங்களின் கதைகளையும் இணைத்துள்ளார்கள். அந்த வெற்றியாளர்களில் கண்டு பிடிப்பாளர்கள் உண்டு. பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. வர்த்தகத் தலைவர்களும் ஆலோசகர்களும் உண்டு, மற்றும் ஜனாதிபதிகளும்கூட உண்டு.
இந்தச் சக்திவாய்ந்த நூலைப் படிக்கும்போதே நீங்கள் மாற்றத்தை உணரமுடியும். படித்த பிறகு உங்கள் விதிக்கு நீங்களே தலைவர் ஆவீர்கள். உங்கள் ஆன்மாவை நீங்களே வழிநடத்துபவர் ஆவீர்கள்.
நெப்போலியன் ஹில், 1883ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள விர்ஜீனியா மாநிலத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஹில் தன்னுடைய இளம் வயதிலிருந்தே, ஆன்ட்ரூ கார்னகி, தாமஸ் எடிசன், அலெக்சான்டர் கிரகாம் பெல் போன்ற மாபெரும் சாதனையாளர்களைப் பற்றிக் கற்றறிந்தார். வெற்றி அறிவியலில் குறிப்பிடத்தக்கதொரு சிந்தனையாளராகவும் வல்லுநராகவும் அவர் உருவெடுத்தார். மகத்தான சாதனைகளைப் படைத்த ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’ என்ற புத்தகம் 1937ல் வெளியானது. இது கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுவரை இந்நூல் 7 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. அவர் ஒரு மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும்கூட. அமெரிக்கா நெடுகிலும் பயணம் செய்து வெற்றிக் கொள்கைகள் குறித்து எண்ணற்ற ஊர்களில் பேசி இலட்சக்கணக்கானோரை அவர் ஊக்குவித்துள்ளார். 1962ல் அவர் ‘நெப்போலியன் ஹில் அறக்கட்டளை’யை நிறுவி, தனது கொள்கைகள் என்றென்றும் தழைத்திருக்க வழி வகுத்தார். 1970ல் தனது 87வது வயதில் அவர் காலமானார்.
Be the first to rate this book.