10 தமிழ்ச் சிறுகதைகள், 2 மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், 13 கவிஞர்கள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், இலக்கிய மதிப்புரைகள், விமர்சனங்கள் இந்த இதழை அணி செய்கின்றன.
கவிஞர் விக்ரமாதித்யன் சிறுகதை 'பூக்கடை ', தேவதேவன் கவிதைகள், எழில் சின்னத்தம்பியின் 'ஏழு தளங்கள்' மொ.பெ. சிறுகதை, மற்றும் இரா.சுகந்தனின் 'யெவ்கனி யெவ்துஷென்கா' கவிதைகள் மொ.பெ., கு.அழகிரிசாமியின் முக்கிய நாட்குறிப்புகள், பண்டைத் தமிழர் தொல் ஆய்வில் சிறந்த த.தங்கவேலின் மெய்யியல் கட்டுரை, உலகப் பொருளியல் மாற்றங்களில் சிதைக்கப்படும் கடல்சார் தற்சார்பு வாழ்வியல் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் கிளாரட்டின் சூழலியல் கட்டுரை, சங்கத் தமிழ் இலக்கிய புலமைகொண்ட மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் நேர்காணல், வளரும் எழுத்தாளர்களின், கவிஞர்களின் எழுச்சியும் பரிசோதனையும் கொண்ட படைப்புகள் ஆகியவை வாசகர்கள் தவறாமல் வாசிக்க வேண்டியவை. புதிய திசையில் பயணிக்கும் நவீன படைப்புகள் இந்த இதழை மெருகேற்றி இருக்கின்றன.
Be the first to rate this book.