எங்கள் வாசலில் மலர்ந்த கோலங்களை யார் அழித்தது? எங்கள் குளங்களில் மண்ணள்ளிப் போட்டு மாளிகைகள் எழுந்தது எங்ஙனம்? படகுகள் மிதந்த எங்கள் வெள்ளாற்றில் சரக்குந்துத் தடங்கள் எப்படி வந்தன? எண்வழிச் சாலைக்கு தன் கூரையை இழந்த எங்கள் மாரி எங்கே போனாள்? எங்கள் பாட்டன் ஏரோட்டிய நிலத்தில் கார் கம்பெனிகள் வந்தது எவ்வண்ணம்? காட் ஒப்பந்தம், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என்கிறார்கள். எங்களுக்கு ஏதும் புரியவில்லை. இந்த தேசம் வளர்ந்தபோது எங்கள் மருதம் திரிந்தது. மருதத்திலிருந்து வெளியேறியபோது நாங்கள் விட்டுவந்த உறவுகளிடம் பேச, ஓர் அலைபேசி வாங்கிக் கொடுத்தோம். அவர்கள் அதில் ரீல்ஸ் பார்க்கக் கற்றுக் கொண்டார்கள். நாங்கள் மருதத்தை விற்று பிரியாணி வாங்கி பசியாறப் பழகினோம்.
Be the first to rate this book.