புனைவு படைப்புகளில் நெல்லை வட்டார வழக்கு அதன் உச்சரிப்பு அழகுக்கு மிகவும் புகழ்பெற்றது. இளைய தலைமுறையில் ராணி கணேஷின் எழுத்தில் அந்த வழக்கு வெற்றிகரமாக வந்து சேர்ந்திருப்பதற்கு இந்த “திம்மராஜபுரத்துக் கதைகள்” நல்ல சான்று. இவை திம்மராஜபுரத்துக் கதைகள் என்றாலும் அவை நெல்லையின் கதைகள் தான். இன்றைய திருநெல்வேலி நடுத்தர வர்க்கத்து வாழ்வியலை இந்தக் கதைகள் நமக்கு எழுத்தில் அறிமுகப் படுத்துகின்றன. பொதுவாகப் புனைவுகளைப் பலப்படுத்த வட்டார வழக்குடன் உணர்வுகள் மிகவும் முக்கியம். கையாளும் களம், கதாபாத்திரம் மற்றும் மொழிநுட்பம் என்று ராணி ஒவ்வொரு கதையிலும் இயல்பான போக்கில் அதைக் கண்டடைகிறார். பெண்ணெழுத்தில் வட்டார வழக்கு என்பதைத் தமிழில் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையிலும் ராணி கணேஷ் முன்னிலை பெருகிறார். எழுத்தில் ராணி கணேஷிற்கு இது முதல் புத்தகம். ஆனால் கதைகள் பேசும் விதம் நம்மை முதல்தரமான வாசிப்பின்பத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
- செண்பகக்குழல்வாய்மொழி
Be the first to rate this book.