“கப்பல் அதோ பார்த்தீர்களா? வெள்ளைத் திமிங்கிலத்தை நீங்களாவது கண்டீர்களா?"
அந்தக் கப்பலின் தலைவன் தனது ஊதுகுழலை வாயருகில் வைத்துக்கொண்டவன் எங்கள் குரலைக்கேட்டதும் அதைவிட்டு விட்டான். குழல் தண்ணீரில் விழுந்துவிட்டது. இதற்கிடையில் இரண்டு கப்பல்களுக்கிடையில் இருந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்தது. வெள்ளை திமிங்கிலத்தைப் பற்றி மற்றொரு கப்பல்காரர்களிடம் கேட்ட நிகழ்ச்சியை பெக்குவாட் கப்பலைச் சேர்ந்தவர்கள் மெளனமாகவே கேட்டுக்கொண்டிருந்தனர். அஹாப் கூட இதைக்கண்டு ஒருநிமிடம் திகைத்தார்.
"இதுதான் பெக்குவாட் சுப்பல். இது உலகைச் சுற்றும் பயணத்தில் கிளம்பியுள்ளது. இனி ஊரில் இருந்து எங்களுக்கெழுதும் கடிதங்களையெல்லாம் பசிபிக் மகாசமுத்திரத்திற்கே எழுதச் சொல்லுங்கள்...
Be the first to rate this book.