பேரிசைச்சலுக்கு இடையே யாரேனும் ஒருவர் துணுக்காய் மெல்லிசையை ரசித்துக் கொண்டிருக்கிறார்.அவருக்குள் இசைத்துக் கொண்டிருப்பது அனைவருக்குள்ளும் இருக்கிறது. எப்போதுமாக அல்ல. நவீன வாழ்வில் சொல்லவொணா மெய்நிகர் இன்னலுறும் மனிதச் சமுதாயத்தில் யாரேனும் ஒருவர் கவி மனம் கொண்டவராக இருக்கிறார். சுற்றி நடப்பதை கூர்ந்து நோக்குபவராக உள்ளார். கவிதை குறித்துத் திட்டமிடல் ஏதுமின்றி இருப்பவர்களுக்குக் கவிதை, திறந்த கூடாகவே இருக்கிறது. சிபிக்கு அப்படியான கூடு கையில் கிடைத்திருக்கிறது.
-கவிஞர் வேல் கண்ணன்
Be the first to rate this book.