வீணை என்றால் பாலச்சந்தர், பாலச்சந்தர் என்றால் வீணை எனப் பெரும்புகழ் பெற்றவர் வீணை எஸ்.பாலச்சந்தர். 7 வயதிலேயே இசையுலகில் பெயர்பெற்று விளங்கியவர். கலைக் குடும்பத்தில் தோன்றியதால், யாரும் கற்றுத்தராமலே பல இசைக் கருவிகளையும் தானாகவே கற்றுத் தேர்ந்தார். சிறு வயதில் கஞ்சிராவை வாசித்தே அவர் புகழ்பெற்றிருந்தாலும், வீணை அவருக்கு மிகமிகப் பிடித்த இசைக்கருவியாகும். இசையுலகில் புகழ் பெற்றதோடு இவர் நின்றுவிடவில்லை. திரைத் துறையிலும் தனக்கென ஒரு தனியிடம் பெற்றவர். நடிப்பில் துவங்கிய இவரின் திரைப்பயணம், இயக்குனர், தயாரிப்பாளர், என்றவாறு எந்தப் பொறுப்பிலும் தனக்கென ஒரு தனிமுத்திரை பெற்றவர், இவரது பிறப்பு தொடங்கி, இவரது திரைத்துறை அனுபவங்கள், நடித்த, இயக்கிய திரைப்படங்கள் எனப் பல செய்திகளையும் இந்நூல் கதைகூறுவது போன்று எளிய நடையில் சுவையோடு எடுத்துரைத்துள்ளது.
Be the first to rate this book.