அவளது கவிதைகளில் வருகிற அந்த வீட்டையும், அந்த நீளமான அடுப்பாங்கரையையும், அங்கு ஜீனு ஓயாமல் பிடித்துக்கொண்டு அலைந்த வாயல்புடவையின் முந்தானையையும் நன்கறிவேன் நான். அந்த முந்தானைக்குரியவளின் சாம்பல் வளையமிட்ட கருவிழிகளும், அதிலிருந்து புறப்படுகிற பரிவுமிகு பார்வையும் எப்போது நினைத்தாலும் மனதிற்குள் இரட்டை சந்திரோதயமாய் எழும் எனக்கு. அம்மா இருந்திருந்தால் நெற்றி முத்தமிட்டு ஜீனுவை வாழ்த்தியிருப்பார், அம்மாவை மனதில் ஏந்திக்கொண்டு நானும் உன்னை வாழ்த்துகிறேன் ஜீனு.
-ரம்யா அருண ராயன்
Be the first to rate this book.