ஒரு நாட்டின் எதிர்காலம், அதன் இளைய தலைமுறை குறிப்பாகப் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்கள். இனி வரும் காலம் அறிவியலின் காலம் என்று சொல்வதை விடவும், அறிவியலே ஒரு உலகார்ந்த மொழியாக, மதமாக மெல்ல மெல்ல உருமாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்திற்குள் நாம் ஏற்கனவே பிரவேசித்துவிட்டோம் என்று சொல்லலாம். அதற்கேற்ப, நம் தமிழ்ச் சமூகத்தின் சிறார் மற்றும் இளையோர்களைத் தொடர்ந்து தயார் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கிறது. கதையாடல்கள்வழி, அறிவியலைத் தங்கள் பொது வாழ்வின் சூழல்களுக்குப் பொருத்திப் பார்க்கவும், சிக்கல்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் தேடவும் மாணவ சமுதாயத்தைத் தயார் செய்ய, பழக்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இக்காலகட்டம் அமைந்திருக்கிறது. அதைச் சாத்தியப்படுத்த என்னாலான ஒரு சிறு பங்களிப்பே 'தீசஸின் கப்பல்' நூல் எனலாம்.
-ராம் பிரசாத்
Be the first to rate this book.