வாழ்வின் தெரிவுகளைத் தெளிவாக வரையறுத்த பின் வெகுசனத்திடம் இருந்து எதிர்கொள்ள வேண்டிவரும் எதிர்ப்புகளையும் வியாக்கியானங்களையும் புறந் தள்ளுவதிலேயே ஆற்றல் மொத்தமும் வீணாவதாய் உணர்கிறேன். என் 'சரி' எல்லோருக்கும் 'சரி' ஆக இருக்க வேண்டியது இல்லைதான். ஆனால் இயல்பாக நம் அடிப்படை அறிவு கூறும் பொதுவான தெள்ளத் தெளிவான 'சரி' என்று சில உண்டல்லவோ? பெரும்பாலானோர் மனம் புண் படுவதாய் இருந்தாலும் அந்தத் தெள்ளத் தெளிவான 'சரி' யின் பக்கம் நிற்கவே விழைகிறேன். பெரியார் துணைக்கோடலை நண்ணுதலால் என் 'இட'த்தை விட்டு நகராமல் நான் சான்றோர் எனக் கொண்ட பெருமக்களின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன்.
Be the first to rate this book.