ஒரு பொருளை தகவலாகப் பார்ப்பதற்கும் அதன் உட்சென்று நுட்பமாய் அறிவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக, 'வௌவால் தலைகீழாகத் தொங்கும்' என்பதை அனைவரும் அறிவர். ஆனால் அது ஏன் அப்படித் தொங்குகிறது? வௌவால்களில் எத்தனை வகைகள் உண்டு? அதன் சிறப்பியல்புகள் என்ன? வாழ்க்கை முறை என்ன? போன்றவற்றை அறிவதை நுட்பம் எனலாம்.
'மல்லிகை ஏன் இரவில் பூக்கிறது. நீர் அருந்தாத தவளை, காயான பழம், வெட்கப்படும் செடி என ஏராளமான வியப்பூட்டும் அறிவியல் செய்திகள் இந்நூலில் உள்ளன. மாணவர்களுக்கான அறிவியல் தகவல்கள் என்ற வகையில் இந்நூலைப் படைத்திருந்தாலும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பெட்டகமாக இந்நூல் அமைந்துள்ளது. அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்து பயனுற வேண்டுகிறோம்.
Be the first to rate this book.