கலை தத்துவம் பற்றிய ஒரு பொக்கிஷம்தான் 'தேதீர்க் கலை' (THE BOOK OF TEA) எனும் இந்தப் புத்தகம். டாக்டர் ஆனந்த குமாரசாமி எழுதிய 'சிவ நடனம் (THE DANCE OF SINA) கலைத் தத்துவத்தில் எந்த அளவு முக்கியமான புத்தகமோ, அந்த அளவுக்கு முக்கியமானதுதான் ஜப்பானிய அறிஞர் ஓக்ககூரா காக்குஜோ எழுதிய இந்நூல். ஜென், டாவோயிசத் தத்துவங்களையும், ஜப்பானியப் பண்பாட்டு நுட்பங்களையும் ஒளி காடுருவும் தேநீரின் எளிமையுடன் பேசும் உன்னதமான இந்நூலை, 30 ஆண்டுகள் தாகூரின் சாந்தி நிகேதனில் வாழ்ந்த ஓவியர் அ.பெருமாள் ஜப்பானிய மொழியிலிருந்து நேரிடையாக மொழிபெயர்த்து 1989இல் மதுரையில் வெளியிட்டிருக்கிறார். எஸ்.ரா.பவுண்டு, டி.எஸ். எலியட் போன்ற கவிஞர்களின் மனம் கவர்ந்த இந்நூல்.
-கவிஞர் இந்திரன்
Be the first to rate this book.