கவிதைக்கு முரண் அழகு!
வெற்றி என்பதே போதைதான்! அதனால்தான் வெற்றி பெற்றவர்களுக்குக் கோப்பையைப் பரிசாகக் கொடுக்கிறார்கள் என்னும் மாறுபட்ட சிந்தனையில் தொடங்கி, நதி ஓடிய பாதையில்தான் இன்று நாம் நடந்து போகிறோம் என்கிற அவலம் நிறைந்த சிந்தனை வரையில் சின்னச் சின்னதாய்ப் பல்வேறு எண்ணக் குவியல்களால் இந்நூல் உருவாகி உள்ளது! தென்றலின் நடைப்பயிற்சி என்னும் இந்நூலைத் தந்திருக்கிற கவிஞர் எம். சோலைக்கு முதலில் நம் அன்பும், வாழ்த்துகளும்!
கவிதைக்குப் பொய் அழகு என்பார்கள். இல்லை. கவிதைக்கு முரண் அழகு என்பதை இந்நூல் எடுத்துச் சொல்கிறது! சாதாரணமாக நம் கண்களில் படுகிற. அனுபவத்தில் அறிகிற பலவற்றுக்குள்ளும், எப்படிச் சில முரண்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை இந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க நாம் அறிந்து கொள்கிறோம்!
- சுப. வீரபாண்டியன்
Be the first to rate this book.