ஒவ்வொரு கதையிலும் ஒரு ரகசிய சக்தி மறைந்திருக்கும். அதை உணர்ந்தவுடன் கதாநாயகனின் வாழ்க்கை மாற ஆரம்பிக்கிறது. அந்த மாற்றத்தைத் திரைக்கதையில் எப்படி உருவாக்க வேண்டும்? அதை எப்படி எழுத்தில் கொண்டுவர வேண்டும்? என்பதைத் தெளிவாக சொல்லித் தரும் ஒரு பயனுள்ள புத்தகம்தான் இந்த ‘தீர்க்கதரிசனம்’ (Prophecy).
ஒரு கதாபாத்திரம் தன் விதியை அறிந்து அதிலிருந்து ஓட முயலும்போது அடுத்து என்ன நடக்கும்? விதியைத் தவிர்க்க முயலும் பயணம் எப்படி, கதாபாத்திரத்தின் ஒரு புதிய பாதையை உருவாக்குகிறது? இறுதியில் அந்தப் பயணமே அவரை உண்மையான மாற்றத்துக்கு எப்படி அழைத்துச் செல்கிறது?—இந்த மூலக்கருவை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் இது விளக்குகிறது.
இந்தப் புத்தகம் Prophecy Wheel (ப்ராபஸி வீல்) என்ற பத்து நிலைப்படிகளைப் பயன்படுத்தி, கதையின் ஏற்றத் தாழ்வுகளை தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. ஒவ்வொரு படிநிலையும் நமக்கு எளிதில் புரியும் உதாரணங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.
திரைக்கதை, நாவல், குறுங்கதை— என எதை எழுத விரும்பினாலும், விதியும் மாற்றமும் அடிப்படையாக உடைய வலுவான கதைகளை உருவாக்க இந்நூல் உங்களுக்கு உதவும். எழுத்தாளராக வளர விரும்பும் அனைவருக்கும் இது மிகப் பயனுள்ள புத்தகமாக இருக்கும். உங்கள் கதைக்கு தேவையான ஆழத்தையும் இயக்கத்தையும் கொடுக்கும் ஒரு நம்பகமான வழிகாட்டி இது.
Be the first to rate this book.