'தீரர்கள் கோட்டம் தி.மு.க.' என்ற தலைப்பே மிக மிகப் பொருத்தமானது. உழைப்பை மட்டுமல்ல, உயிரையே கொடுத்த தீரர்களின் கோட்டம், அத்தகைய தியாகிகளின் வரலாற்றைப் படிக்கும்போது கண்ணீர் வரவைக்கிறது.
இந்தித் திணிப்பு எதிர்ப்புக் களத்தில், ஈழத்தமிழர்க்கான உரிமைப் போராட்டத்தில், எல்லைப் போர்க் களத்தில், அடக்குமுறையில், அவசரநிலைக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் எதிர்கொண்ட வேதனைகளும், சோதனைகளும் கல்வெட்டாக இந்நூலில் பதிவாகி இருக்கின்றன.
உயிர் தந்தோர் பட்டியல் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் பெயர்கள் இருக்கின்றன. அவசரநிலைக் காலத்தில் சிறை சென்றோர் பெயர்கள் இருக்கின்றன. எந்தெந்த ஊரில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன, யாரெல்லாம் பங்கெடுத்தார்கள் என்பதும் இருக்கிறது. அந்த வகையில் தியாகப் புத்தகம் என்றே இதனைச் சொல்லலாம்!
1949-இல் இயக்கம் தொடங்கியது முதல் 2025 வரையிலான வரலாற்றுப் பயணக் குறிப்புகள் இதில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் போராட்ட ஆண்டாகவே இருக்கின்றது. ஆட்சியில் இருந்த காலத்திலும் வீறுகொண்ட இயக்கமாகக் கழகம் இருந்திருப்பதை அனைவரும் உணரலாம்.
- மாண்புமிகு மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர்
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்
Be the first to rate this book.