இந்தியா முழுவதும் பதினெட்டு மாநிலங்களில், 16 ஆயிரம் கிலோ மீட்டர்களை 116 நாள்களில் சுற்றிய பயண அனுபவமே இந்நூல். தனிப்பயணியாக பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து இந்தியாவின் பன்மைத்துவத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு இப்பயணம் நிகழ்த்தப்பட்டது. இந்தியாவின் மிக நீண்ட தொலைவு பயணிக்கும் விவேக் எக்ஸ்பிரஸில் கன்னியாகுமரியில் தொடங்கிய பயணம் அப்படியே விரிந்து குவஹாத்தி - தவாங் - பும்லா பாஸ் - தேஸ்பூர் - கோஹிமா - இம்பால் - மோரே - காத்மாண்டு - போகரா - முக்திநாத் - காசி - ரிஷிகேஷ் - கேதார்நாத் - டேராடூன் - மசூரி - சிம்லா - சண்டிகர் - ஜம்மு - ஸ்ரீநகர் - லே லடாக் - மணாலி – கசோல் - அமிர்தசரஸ் - அஜ்மீர் - ஜெய்ப்பூர் - டையூ - டாமன் - கோவா என பரந்துபட்டுச் சென்று கோவையில் நிறைவடைந்தது. முற்றிலும் வேறுபட்ட இந்நிலங்களில் பயணம் செய்த அனுபவத்தை சரளமான நடையில் எழுதியுள்ளார் கி.ச.திலீபன். காட்சிப்பூர்வமான இவரது விவரணைகளைப் படிக்கையில் வாசகருக்குள் அந்தந்த இடங்களுக்கே பயணம் செய்கிற அனுபவம் கிடைக்கப் பெறுகிறது.
Be the first to rate this book.