திராவிட இயக்க வரலாற்றில் தத்துவார்த்தப் போராட்டங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றவை. அந்தப் போராட்டங்களின் உச்ச வெளிப்பாடாக, 1943ஆம் ஆண்டு சென்னைச் சட்டக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற ‘கம்ப இராமாயணம் மற்றும் பெரிய புராணம்’ குறித்த விவாதம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்தது. அந்த விவாதங்களின் தொகுப்பாக வெளிவந்த ‘தீ பரவட்டும்’ எனும் இந்நூல், தமிழரின் தன்னாபிமானம், கலை மற்றும் சமூகச் சிந்தனை குறித்த புதிய பார்வையை முன்வைக்கிறது.
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.